என் மலர்
நீங்கள் தேடியது "2026 தேர்தல்"
- அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
- லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.
இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.
லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
- 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.

இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2026 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வோம்.
- தி.மு.க. தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வாக்குறுதியாக அறிவித்தது.
சென்னை:
சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வெளி மாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் தோன்றியதால் தான் தமிழ்நாடு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவர் உயிரோடு இருந்தவரை யாராலும் அவரை வெல்ல முடியவில்லை.
அவர் உயிரோடு இருந்தவரை முதலமைச்சராக இருந்தார். ஆனால் இன்று தனக்கு பின்னால் தனது மகன் பேரன் கொள்ளு பேரன், ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் தலைவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அவருக்காக வாழ்ந்ததில்லை. அவருக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கட்டிக் காத்து ஆட்சிக்கு வந்தார். தி.மு.க.வினரால் அவர் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். ஆனாலும் துணிந்து நின்று வென்று 15 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சி செய்து சாதனை படைத்தார்.
அ.தி.மு.க.வில் தொண்டர்களின் உழைப்புக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் இப்போது அடுத்ததாக இன்பநிதி ஸ்டாலினும் அழைத்து வரப்பட்டு உள்ளார்.
2026 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வோம். தற்போதைய தி.மு.க. அரசுக்கு ஒரு கேள்வி இந்த 4 ஆண்டில் என்ன சாதித்தீர்கள் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள். தினம் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலம் நினைத்துப்பாருங்கள்.

ஏழை மக்கள் வாழும் பகுதியில் அம்மா மினி கிளினிக் 2000 தொடங்கினோம் தி.மு.க.வினர் அதையும் மூடிவிட்டார்கள் நல்ல நல்ல திட்டங்களை மூடுவது தான் அவர்கள் வாடிக்கை.
மூன்று லட்சத்து 26 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தோம். அதையும் நிறுத்திவிட்டீர்கள். தி.மு.க. தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வாக்குறுதியாக அறிவித்தது. அதில் இதுவரை 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. நாங்கள் மகளிர் உரிமைத் தொகையை கொடுத்திருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தத் தொகையை கூட நாங்கள் அல்லவாவாதாடியும் போராடியும் பெற்றோம். அதுவும் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்த பிறகு தான் கொடுத்தார்கள். கட்டணமில்லா பயணம் செய்கிறார்கள் பெண்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் ஓட்டை உடைசல் பஸ்களுக்கு லிப்ஸ்டிக் போட்டது போல் பெயிண்ட் அடித்து அந்த பஸ்களை தான் பெண்களுக்காக இயக்குகிறீர்கள் எங்கள் ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகளை வாங்கினோம்.
ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் முரண்பட்ட தகவலை வெளியிடுகிறார். மொத்த பஸ்களின் எண்ணிக்கையே 20,000 தான் நாங்கள் வாங்கியது 15 ஆயிரம் பஸ்கள் அப்படியானால் நீங்கள் எத்தனை பஸ்களை வாங்கினீர்கள். இந்த விவகாரங்களை எல்லாம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் சட்டமன்றத்தில் புள்ளிவிவரமாக எடுத்துச் சொன்னேன் இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக வீடியோவை கேட்டால் இரண்டு நிமிட வீடியோவை மட்டுமே தருகிறார்கள். இது தொடர்பாக நீதி மன்றத்திற்கும் சென்று விட்டோம் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை எல்லோரும் அறிவீர்கள். அந்த மாணவி ஒரு சாரையும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். அதைத்தான் யார் அந்த சார் என்று நாங்கள் கேட்டோம். அதைக் கேட்டால் ஏன் கோபம் வருகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரும்புள்ளி இருக்கிறார். உறுதியாக சொல்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது அந்த பெரும்புள்ளி நிச்சயமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்.
தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே மக்கள் ஆதரவுடன் 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செய லாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், கழக எம்.ஜி.ஆர். இளைஞ ரணி துணைச் செயலாளர் 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. ஜெய வர்தன், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிர சாத், காமராஜ், மாலதி ஏசுபாதம், மாநக ராட்சிமன்ற கழக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ் குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரஷ்நேவ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் லட்சுமிகாந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பி.எம்.ஆர்.கவுதம், பி.எம்.ஆர்.ராமதாஸ், மேடவாக்கம் சக்திவேல், நிர்மலா பெரியசாமி, நடிகை கவுதமி, டி.சி.கே.ஹரிஷ், கோ.ஹரி பிரசாத், கண்ணபிரான், ராமச்சந்திரன் ஜானகிராமன், குமார், பழனிவேல், கே.பி.ஏசுபாதம், ராஜசேகர், தேன்ராஜா, வரதராஜன், கவுன்சிலர் அஸ்வினி கருணா, வி.என்.பி. வெங்கட்ராமன், சி.மணிமாறன், பகீம், சக்திவேல, பாபு, இந்திராணி, புருசோத்தமன், கபாலீசுவரன், லோகேஷ், செல்வராணி சுந்தர், பூபதி, மனோகரன், அப்துல்லா, சீனிவாசன், ராஜன், ராஜசேகர், ராஜேஷ், சுர்ஜித்குமார், தனசேகர், விஸ்வநாதன் முடிவில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா நன்றி கூறினார்.
- மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
- ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பணிகளை மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை வலுப்படுத்த பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் என்பதால் அவருடைய பெயர் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது.
இதேபோல், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
கட்சி வளர்ச்சி பணிகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பொறுப்பாளர்கள் வளர்ச்சி பணி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.