என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறிய ரக விமானம்"

    • விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
    • விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    நியூசவுத்வேல்ஸ்:

    ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர். முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

    இந்த நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த முதியவர் கூறியதாவது:-

    எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் பறக்கிறோம். லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எங்களால் கீழே இறங்க முடியாது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா? என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார்.

    எங்கள் விமானம் விமான நிலையத்தை 2 மணி நேரமாக சுற்றி வந்தது. காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரை யிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது. அதனால் தரையிறங்கும் போது தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே விமானி எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றார். அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.
    • விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

    அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி, அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரழிந்தனர்.

    இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களில், அரிசோனாவைச் சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால், 43, ரஸ்டின் ராண்டால், 48, ட்ரூ கிம்பால், 44 மற்றும் கிரஹாம் கிம்பால், 12 என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.

    மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    ×