search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனி செயலாளர் தந்தை மறைவு"

    • உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
    • தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33), இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உள்ளார். தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (60), தாய் சுமதி ஆகியோர் மட்டும் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, பொன்முடி, சுப்பிரமணியம், எ.வ.வேலு, மூர்த்தி, மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சபரீசன், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி மின் மயானத்தில் ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே டி.வி.ரவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் ரவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் 10.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் இங்கிருந்து காரில் மு.க.ஸ்டாலின் வெண்ணந்தூர் சென்றார். அங்கு தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் 12.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் சேலம், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×