search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் முதல் மந்திரி"

    • அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
    • ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும். இதனால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் நமக்கு சாதகமான தாக்கத்தைக் காண்போம்.

    வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரே நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.12 கோடி மரக்கன்றுகளை நட்டு 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது.

    மரம் நடும் பிரசாரத்தை செயல்படுத்த மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மத்தியப் படைகளை இணைத்துள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளை அகற்றி மீட்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு இயக்கங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    • நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம்.
    • ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்.

    அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் முதல் தங்கள் மின்சார கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அவரது தலைமைச் செயலாளரும் தங்கள் குடியிருப்பு மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி செலுத்த தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுக்கு மின்கட்டணம் செலுத்தும் 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.

    அதற்கு முன்னுதாரணமாகி நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம். ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறி உள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.

    இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.

    ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.

    ×