search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்ஸ்மேன்"

    • பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பவுலர்கள் பவுண்டரி எல்லை சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர்.
    • அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு?

    புதுடெல்லி:

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையேயும், பவுண்டரி எல்லைக்கும் சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

    குறிப்பாக, பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்குச் சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர். அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, சுனில் கவாஸ்கர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

    6 பந்துகள் வீசி முடித்தபின் ஒரு பந்துவீச்சாளர் டிரிங்ஸ் பிரேக் எடுக்கிறார் என்றால், பிறகு எதற்கு கூடுதலாக டிரிங்ஸ் பிரேக் என ஒன்றை வழங்க வேண்டும்.

    6 பந்து வீசிய பவுலருக்கே டிரிங்ஸ் பிரேக் என்றால், ஒரு ஓவரில் 8 ரன் அல்லது அதற்கு மேல் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்த டிரிங்ஸ் பிரேக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, எதிர் கேப்டனின் அனுமதி பெற்ற பிறகு பானங்கள் மைதானத்திற்குள் எடுத்து வரவேண்டும் என்ற முறையை திரும்ப கொண்டுவர வேண்டும்.

    ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே மைதானத்துக்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது சக வீரருக்கு குளிர்பானம் தர வேண்டுமானால் அது பவுண்டரி லைனில் இருந்தே கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    ×