என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெட்டிசன்கள்"
- இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம்.
- ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.
இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகை வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பத் தவறுவதில்லை.
வியக்க வைக்கும் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழாமலில்லை. அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.
அவர்களது முக பாவனைகள் வினோதமாக மாறுகிறது. தங்களது உடலை வளைத்து உறுமுவது போன்ற சத்தத்தை வெளியிடுகின்றனர். பேய் பிடித்தது போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆனால் அருகில் உள்ளவர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்களது இடங்களிலேயே அமர்ந்து அந்த பெண்களை வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அந்த பெண்களை நம்புவதாக இல்லை. டிக்கெட் எடுக்காமல் டிடிஇ இடமிருந்து தப்பிக்கவே இப்படியொரு நாடகத்தை அந்த பெண்கள் அரங்கேற்றியுள்ளனர். அதனாலேயே அருகில் உள்ளவர்கள் பயப்படவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழயர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நூசா நிறுவனத்தின் ஏர்பஸ் A320 என்ற விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ஏணியை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி அந்த ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் விமான நிலையங்களில் நடப்பது தொடர்கதையாகி வருவதாகவும் நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். இந்த சம்பவத்துக்கு நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்