search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை விருந்து"

    • ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார் என சுசித்ரா கூறியிருந்தார்.
    • சுசித்ரா சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர் மீது புகார் அளித்துள்ளேன் என ரீமா கல்லிங்கல் கூறினார்.

    மலையாள பட உலகம் பாலியல் புகாரில் சிக்கி அல்லோலப்படும் நிலையில் தமிழில் 'யுவன் யுவதி, சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாக பின்னணி பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார்.

    அவர் கூறும்போது, "ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார். அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு போதை பழக்கத்துக்கு அடிமையானார்கள். இந்த தகவலை அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். போதை விருந்து நடத்தியதால்தான் ரீமா கல்லிங்கலின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது'' என்றார். இது பரபரப்பானது.

    இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரீமா கல்லிங்கல் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்வதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ரீமா கல்லிங்கல் வெளியிட்டுள்ள பதிவில், "சுசித்ரா தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். அவர் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

    • அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.
    • கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் போதை விருந்துக்காக வாசுவை தேடி வரத் தொடங்கினர்.

    ஆந்திர மாநிலம், விஜயவாடா அடுத்த ஆஞ்சநேய வாகு அடுத்த லங்கா பள்ளியை சேர்ந்தவர் வாசு (வயது 33). தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இவரது தாய் எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். 2 சகோதரிகள் உள்ளனர்.

    குடும்ப வறுமை காரணமாக வாசு 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

    தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியின் போது பந்தயம் கட்டி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடந்தது.

    அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பந்தயம் கட்டியதில் ரூ.5 கோடி வருவாய் கிடைத்தது.

    பணத்தை கொண்டு பெங்களூரு சென்ற வாசு போதை பொருட்களை வாங்கி வந்து நடிகர்- நடிகைகளுக்கு போதை விருந்து வைத்தார்.

    அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.

    கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் போதை விருந்துக்காக வாசுவை தேடி வரத் தொடங்கினர். இதனால் வாசுவுக்கு கோடி கோடியாக பணம் கொட்ட தொடங்கியது.

    வாசு குறுகிய நாட்களிலேயே பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆனார்.

    பெங்களூரு புறநகர் பகுதியில் வில்லா ஒன்றை கட்டி அங்கு வருபவர்களுக்கு போதை விருந்து வைத்தார். போதை விருந்து மூலம் தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட காஸ்மோபாலிடன் நகரங்களில் வில்லாக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளை தனது ரசனைக்கு ஏற்றார் போல் கட்டினார். மேலும் ரூ.6 கோடி மதிப்பில் 4 கார்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு புறநகர் பகுதியில் போதை விருந்து நடந்த போது போலீசார் போதை விருந்தில் கலந்து கொண்டவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    போதை விருந்தில் நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வாசுவை கைது செய்தனர்.

    மேலும் யார் யாருடன் வாசுவுக்கு தொடர்பு உள்ளது. போதைப்பொருட்களை எங்கெங்கு வாங்கினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×