என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நடிகர்-நடிகைகளுக்கு போதை விருந்து: 10-ம் வகுப்பு படித்துவிட்டு பல நூறு கோடிகளை சேர்த்த வாலிபர்
- அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.
- கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் போதை விருந்துக்காக வாசுவை தேடி வரத் தொடங்கினர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அடுத்த ஆஞ்சநேய வாகு அடுத்த லங்கா பள்ளியை சேர்ந்தவர் வாசு (வயது 33). தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இவரது தாய் எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். 2 சகோதரிகள் உள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக வாசு 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியின் போது பந்தயம் கட்டி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடந்தது.
அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பந்தயம் கட்டியதில் ரூ.5 கோடி வருவாய் கிடைத்தது.
பணத்தை கொண்டு பெங்களூரு சென்ற வாசு போதை பொருட்களை வாங்கி வந்து நடிகர்- நடிகைகளுக்கு போதை விருந்து வைத்தார்.
அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் போதை விருந்துக்காக வாசுவை தேடி வரத் தொடங்கினர். இதனால் வாசுவுக்கு கோடி கோடியாக பணம் கொட்ட தொடங்கியது.
வாசு குறுகிய நாட்களிலேயே பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆனார்.
பெங்களூரு புறநகர் பகுதியில் வில்லா ஒன்றை கட்டி அங்கு வருபவர்களுக்கு போதை விருந்து வைத்தார். போதை விருந்து மூலம் தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட காஸ்மோபாலிடன் நகரங்களில் வில்லாக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளை தனது ரசனைக்கு ஏற்றார் போல் கட்டினார். மேலும் ரூ.6 கோடி மதிப்பில் 4 கார்கள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு புறநகர் பகுதியில் போதை விருந்து நடந்த போது போலீசார் போதை விருந்தில் கலந்து கொண்டவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
போதை விருந்தில் நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வாசுவை கைது செய்தனர்.
மேலும் யார் யாருடன் வாசுவுக்கு தொடர்பு உள்ளது. போதைப்பொருட்களை எங்கெங்கு வாங்கினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்