search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber ​​attack"

    • குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது45). பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான இவர் கப்பில் கிழக்கு பகுதி பூத் தலைவராக இருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.

    அதன்பேரில் காயம்குளம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கடந்த 22-ந்தேதி கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மனோஜ் மறுநாள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலைமுயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இருந்தபோதிலும் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    அதன்பிறகு வீட்டில் இருந்துவந்த மனோஜ் மீது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் பலர் சைபர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது ஜாமீனில் வெளிவராத முடியாக பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்த மனோஜ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தனக்கு எதிரான சைபர் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மனோஜ் வேதனையில் இருந்துவந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே தன் மீதான சைபர் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×