search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு மாநிலம்"

    • ரீமால் புயல் மேற்கு வங்காளம்- வங்களாதேசம் இடையே கடந்த 26-ந்தேதி கரையை கடந்தது.
    • இந்த புயலால் வடகிழக்கு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

    வட இந்திய பெருங்கடலில் உருவான ரீமால் புயல் மேற்கு வங்காளம் வங்காள தேசம் இடையே கடந்த 26-ந்தேதி கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கடந்த சில தினங்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் கனமழை பெய்தது.

    கனமழையால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் இந்திய ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. தற்போது அவர்கள் மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவிப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் தற்காலி சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர்.

    அசாம் மாநில அரசு நிர்வாகம் கடந்த 27-ந்தேதி உதவுக்கு அழைத்தது. அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கியது என இந்திய ராணுவம் தெரிவித்தள்ளது.

    அதேபோல் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் தற்போது வரை 4 ஆயிரம் மக்களை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மீட்டுள்ளோம். இதில் 1500 பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் அடங்குவார்கள். மேலும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடடினடியாக கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். அதேபோல் ராணுவ மெடிக்கல் குழு 102 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    ×