என் மலர்
இந்தியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித் ஷா

- டெல்லியில் இருந்து இன்றிரவு அசாம் புறப்பட்டுச் செல்கிறார்.
- ஞாயிற்றுக்கிழமை வடக்கிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடக்கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று இரவு புறப்பட்டு செல்கிறார்.
அமித் ஷா டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்றிரவு அசாம் மாநிலம் ஜோர்ஹாத் சென்றடைகிறார். அங்கிருந்து கோலாகத் மாவட்டத்தில் உள்ள டெர்கானுக்கு செல்கிறார். அங்குள்ள பர்புகான் போலீஸ் அகாடமியில் தங்குகிறார்.
நாளை காலை போலீஸ் அகாடமியின் 167.4 கோடி ரூபாயில் முடிவடைந்த முதற்கட்ட பணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் 425.48 கோடி ரூபாய் 2-ஆம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் அசாமில் இருந்து மிசோரம் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அசாம் ரைபிள்ஸ் ஐஸ்வாலில் இருந்து ஜோகாவ்சங்கிற்கு மாற்றப்படுவதை குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திற்கு திரும்புகிறார். இரவு மாநில விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
ஞாயிறு காலை அசாம் மாநிலம் கோக்ராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள டோட்மா செல்கிறார். அனைத்து போடோ மாணவர்கள் சங்கத்தின் (ABSU) 57-வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.
பின்னர் கவுகாத்திக்கு திரும்பும் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.
பின்னர் ஞாயிறு இரவு டெல்லி திரும்புகிறார்.