search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடியில் வன்முறை"

    • மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • 960 கம்பெனி துணை ராணுவத்தினருடன், உள்ளூர் போலீசார் 33 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

    இதில் மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 960 கம்பெனி துணை ராணுவத்தினருடன், உள்ளூர் போலீசார் 33 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

    வன்முறையில் EVM, VVPAT இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டுக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×