என் மலர்
நீங்கள் தேடியது "அரசியல் காழ்ப்புணர்ச்சி"
- சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.
- பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை வந்தார். அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வழிபட்டார்.
சாமி தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும் என அருணாசலேஸ்வரரை வேண்டி வணங்கினேன்.
போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.
இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் தான் செல்கின்றனர்.
தேர்தலில் தோல்வி அடைவோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால் தான் இன்றைய கூட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 2-ம் கட்ட தலைவர்களை அனுப்பு கிறார்கள்.
பிரதமர் கன்னியா குமரிக்கு வந்துள்ளது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அதனால் தான் பா.ஜ.க.வின் ஒரு தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை.
விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ தேவையில்லை. விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்தாலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மக்கள் தடுக்கப்படவில்லை.
எதில் எல்லாம் அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமி தரிசனம் செய்ய காத்திருந்த அண்ணாமலையுடன் வரிசையில் நின்ற பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அப்போது ஒரு சிறுமி இன்று எனது பிறந்த நாள் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டார். அந்த சிறுமியை வாழ்த்திய அண்ணாமலை சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.