என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் நிறுத்த ஒப்பந்தம்"

    • இஸ்ரேல் மூன்று வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது.
    • போர் நிறுத்தத்திற்கான நேரம் இது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

    இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ராணுவம் மூன்று வடிவிலான போர் நிறுத்தத்தை முன்வைத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். மேலும், போரை நிறுத்துவதற்கான நேரம் இது. இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கான திறன் ஹமாஸிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவும் மற்றும் திங்கட்கிழமை காலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சனிக்கிழமை நள்ளிரவு புரைஜி முகாம் அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நுசெய்ரத் முகாமில் தாக்குதப்பட்ட தாக்குதலில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடத்தி செல்லப்பட்டதாக கருதப்படும் பிணைக்கைதிகளில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள ரஃபா நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    காசா மீது நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.

    • உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியது.
    • ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    "நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது," என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.

    • ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றச்சாட்டு.
    • இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

    ×