என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்"
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க மீண்டும் நோட்டீஸ்
- மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்துவிட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், தாடேபள்ளியில் அரசு அனுமதி யின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நேற்று அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விசாகப்பட்டினம் அடுத்த பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீசில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகர குழும ஆணையத்தின் அனுமதியின்றி கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி அலுவலகம் இடிக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், `புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.
மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக உயர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
- கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது.
- ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
- மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.
ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.
- ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
- பவன் கல்யாணை ஆதரித்வர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 100 முதல் 120 இடங்களில் வெற்றி பெறுவார் என புரோக்கர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பந்தயம் கட்டினர்.
இதற்கு ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
50 முதல் 60 இடங்களை பெறுவார் எனவும் 68 முதல் 78 இடங்கள் வருவார் என மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டி பந்தயம் சென்றது. ஆனால் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்ட வில்லை.
இதேபோல் பிதாபுரத்தில் பவன் கல்யாண் வெற்றி பெறுவார் எனவும் தோல்வி அடைவார் எனவும் ரூ. 200 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினா். பவன் கல்யாணை ஆதரித்து பணம் கட்டியவர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.
ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நம்பி பணம் கட்டியவர்கள் ரூ. 2 ஆயிரம் கோடி வரை பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்