search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சூர்"

    • மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
    • நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

    மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலுமே பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பா ளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தல் மூலமாக கேரளாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாரதிய ஜனதா, அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை போட்டியிட செய்தது.

    மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ் கோபி, கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட வர்களை களமிறக்கியது. அவர்களது வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தொகுதி களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் பதித்தது. அந்த நிலையை தனது வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் சுரேஷ் கோபி பெற்றுத் தந்திருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போதே நடிகர் சுரேஷ்கோபி வெற்றிபெற்றால், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

    மேலும் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வர்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயமாக மத்திய மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கேபினட் மந்திரி அந்தஸ்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் சுரேஷ்கோபி இன்று நேரில் சந்திக்க உள்ளார். மத்திய மந்திரி பதவி பற்றி நடிகர் சுரேஷ்கோபியிடம் கேட்ட போது, "மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும். நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்" என்றார்.

    ×