search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு"

    • டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டெல்லியில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. அதனால் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தண்ணீர் சரியான முறையில் கொடுக்காததே டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என டெல்லி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதையடுத்து யமுனை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் அளவை குறைக்கும் அரியானா அரசை கண்டித்து, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நேற்று 5-வது நாளை எட்டிய நிலையில் அதிஷியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையத்து அவர் டெல்லியில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி அமைச்சர் அதிஷியை உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    • டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை.
    • காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

    ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை. அரியானா அரசு 613 எம்ஜிடி தண்ணீர் தர வேண்டும் என்பது ஒப்பந்தம். தேர்தலுக்கு பிறகு, 3 வாரங்களுக்கும் மேலாக, டெல்லிக்கு 100 எம்ஜிடி தண்ணீர் குறைவாகவே கிடைத்துள்ளது.

    அதிஷி அரியானா அரசு, எல்ஜி சக்சேனா, மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

    அதிஷி 5 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னார்கள். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது சர்க்கரை அளவு 43 ஆக இருந்தது. அவரது குறைந்த சர்க்கரை அளவு 36 ஆக இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அவரை இழக்க நேரிடும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    இதனையடுத்து அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி நாங்கள் பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறினார்.

    • உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
    • அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல்.

    டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லிக்கு, அண்டை மாநிலமான அரியானா தண்ணீர் திறந்துவிடுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான நீரை வழங்கி வருகிறது.

    இதை எதிர்த்து அரியானா அரசு தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர் அதிஷி கடந்த 22 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வறுகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    உண்ணாவிரதம் காரணமாக அதிஷியின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக மோசமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல் தெரிவித்துள்ளார்.

    மருத்துவமனைக்கு கொண்டுவரும் போது அதிஷியின் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தது. அவர் மயக்க நிலையில் இருந்தார், சோடியம் அளவும் குறைவாக இருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஐ.சி.யூ.வில் அதிஷி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் திரவம் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளோம், என்று தெரிவித்தார். 

    • அதிஷி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் குறைவுது மிகவும் ஆபத்து.

    டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு விமர்சித்து வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்றுடன் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிஷியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து சிகிச்சை வழங்குவதற்காக அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிஷின் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் மிகவும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவ்வளவு வேகமாக அதிஷியின் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறைவுது மிகவும் ஆபத்தான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து டெல்லிக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்டதை விட 100 மில்லியன் கலோன் அளவு குறைவாகவே அரியாணா தண்ணீர் திறந்துவிடுகிறது. 

    • டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
    • டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அம்மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், அரியானாவில் இருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இமாச்சல பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை தடுக்கக்கூடாது என அரியானா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

    இருப்பினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பல்வேறு பகுதியில் குடிநீர் லாரிகள் மூலம் வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாள் என மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

    இதனிடையே, டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில், டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவர் ரமேஷ் பிதுரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தினர். கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அரியானா அரசு குறைவாக தண்ணீர் வழங்குவதால் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.
    • மக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் அரியானா தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும்.

    டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு விமர்சித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிஷி கூறியதாவது:-

    இது என்னுடைய 2-வது உண்ணாவிரத நாள். டெல்லியில் மிகவும் மோசமான வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. டெல்லி மாநிலம் 1005 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கலோன்ஸ்) பெற்று மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

    அரியானா மாநிலம் இதில் 613 எம்ஜிடி தான் வழங்க வேண்டும். சில வாரங்களாக அரியானா மாநிலம் 513 எம்ஜிடிதான் வழங்குகிறது. இதனால் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெற முடியாமல் உள்ளனர்.

    எல்லாவகையிலும் நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அரியானா அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதை தவிர வேறு வழியில்லை.

    டெல்லி குடிநீர் வாரியத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது குடிநீர் பிரச்சினை இன்னும் தொடர்வதாக தெரிவித்தனர். நேற்று 110 எம்ஜிடி குறைவாக அரியானா சப்ளை செய்தது. 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெறும் வகையில் அரியானா தண்ணீர் திறந்து விடும்வரை என்னுடைய உண்ணாரவிரதம் தொடரும்.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • பலமுறை கேட்டும் அரியானா அரசு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.

    டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. டெல்லிக்கு அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தற்போதைய நிலையில் அரியானா வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என டெல்லி மாநில அரசு எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், முக்கிய மந்திரியாக திகழும் அதிஷி அரியானா மாநிலத்திடம் கூடுதல் தண்ணீர் கேட்டு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    அதிஷியின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அனுப்பியதாக சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும், கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களின் அவலம் வலியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    தாகத்திற்கு தண்ணீர் வழங்குவது நமது கலாசாரம். டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறுகிறது. இந்த கடுமையான நேரத்தில் அரியானா தண்ணீர் வழங்கும் என நம்பினோம். ஆனால், டெல்லியின் தண்ணீர் பங்கை அரியானா குறைத்துள்ளது என்றார்.

    • டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
    • குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    தலைநகர் டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில் அம்மாநில அரசு அரியானாவில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று டி.கே.சர்மா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாச்சல் வழங்கும் நீர் டெல்லிக்கு தடையின்றி சென்று சேர வேண்டும் என்று அரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    ×