search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ச்சி வீடியோ"

    • நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தீபாவளி அன்று அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நடந்துள்ளது.

    தீபாவளி அன்று மக்கள் இரவில் சாலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்தனர். அப்போது, 35 வயதான சோஹம் படேல் என்பவர் சாலையின் நடுவில் பட்டாசுகளை வைத்து கொளுத்த முயன்றார்.

    அப்போது திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், அந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதன் வீடியோ வெளியாகியுள்ளது. பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண இந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ரெயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
    • ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.

    கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக, 1930ல் உருவாக்கப்பட்டது ஒரு நீராவி இன்ஜின் ரெயில்.

    'பேரரசி' என்று அழைக்கப்படக்கூடிய இந்த பழங்கால ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது.

    இந்த ரெயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.

    இந்நிலையில், பேரரசி ரெயில் மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடினர்.

    அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரெயில் முன்பு செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். ரெயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.

    அப்போது, ரெயிலின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்தார்.

    ரெயிலில் அடிபட்டு பெண் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ×