என் மலர்
நீங்கள் தேடியது "கிரீன்லாந்து"
- அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
- நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என்றார் கிரீன்லாந்து பிரதமர்.
நூக்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு.
- மூன்று பயணமாக கிரீன்லாந்து செல்கிறார்.
டென்மாாக்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழுவில் துணை அதிபர் ஜே.டி. வான்சின் மனைவி உஷா வான்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் மார்ச் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை கிரீன்லாந்தில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தையும், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் பார்வையிட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்கு கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்ன வேலை? எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி இங்கு என்ன செய்ய போகிறார் என்றார். இதேபோல் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளின் கிரீன்லாந்து பயணம் குறித்து அதிபர் டிரம்ப் கூறும் போது, "கிரீன்லாந்தை சேர்ந்த நிறைய பேரை நாங்கள் கவனித்து வருகிறோம். அவர்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுவதன் மூலம் ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கிரீன்லாந்து எதிர்காலத்தில் எங்களுக்கானதாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்," என தெரிவித்தார்.
- கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன.
கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது.
பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி சிறிய வகை மைக்ரோஸ்கோப்பினாலும் பார்த்தறிய முடியாதவை ஆகும்

இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். பனியின் மேற்பரப்பில் இருந்தும், துளைகளில் இருந்தும் இந்த வைரஸ்களின் டிஎன்ஏ க்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செயப்பட்டு வருகிறது.

மைக்ரோ பையோம் உயிரியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ராட்சத வைரஸ்கள் பனியை சேதப்படுத்தும் ஆல்கே - களை அழித்து பனிக்கடி உருகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் எந்த அளவுக்கு வீரியத்துடன் செய்யப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலமே அதைத் தெளிவுபடுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் பணிக்கட்டிகள் வேகமாக உருகி வரும் நிலையில் இந்த ராட்சத வைரஸ்கள் அதற்கு தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பில் பறந்தது.
- சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் ஏற்பட்டது
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் [Stockholm] விமான நிலையத்திலிருந்து அதிகாலை 12.03 மணிக்கு அமெரிக்காவின் மியாமி நகருக்கு ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் [ SAS ] நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது.
வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பின் மீது வந்தபோது மோசமான வானிலை காரணமாகக் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டுள்ளது.

சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையில் தூக்கி மேல் நோக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
பல மணி நேரங்களாக டர்புலென்ஸ் நீடித்ததால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் விமானம் மீண்டும் ஐரோப்பாவுக்கே திரும்பியுள்ளது. பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் காயமுற்றதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
- டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.
இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.
ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.
கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.
இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்
இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர உரையாற்றினார்
- கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்
செவ்வாயன்று தனது புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர செய்தி மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், நான் பதவியேற்கும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும், இது ஹமாஸுக்கு நல்லதல்ல, வெளிப்படையாக யாருக்கும் நல்லது அல்ல. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபோதும் தாக்குதல் நடத்தி இருந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை. மேலும் பதவியேற்றதும் மெக்சிகோ வளைகுடா, அமெரிக்க வளைகுடா என்று மாற்றப்படும் என்றும் தாங்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதால் அந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
- இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
"இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.