என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி மகாராஜ்"

    • பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
    • இதற்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மாநில பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து கட்சித் தலைவராகத் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். உணர்ச்சிகள் அல்லது தேர்தல் பின்னடைவுக்கான சோகத்தால் நான் தூண்டப்படவில்லை.

    ஆளும் மகாயுதி கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியாக போராடுவேன் என வெளியான தகவல் வெறும் புரளி.

    நான் எங்கும் ஓடிப்போக மாட்டேன். நான் மீண்டும் பலத்துடன் போராடுவேன். சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான் என தெரிவித்தார்.

    • சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
    • மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது.

    குஜராத்தின் சூரத் நகரை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் ரானே பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயண் ரானே, "நான் ஒரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஆனால் வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தாரே எழுதியதை படித்துள்ளேன். சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்" என்று தெரிவித்தார்.

    சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை, காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்த நிலையில், இன்று நாராயண் ரானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து இந்த விவாதங்கள் உருவாகியுள்ளன.

    ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில், "சிவாஜி சூரத் நகரை கொள்ளையடித்தார்" என்று எழுதியுள்ளார்.

    வரலாற்றுப் புத்தகங்களில் 1664 மற்றும் 1670 ஆகிய ஆண்டுகளில் 2 முறை சூரத்தை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
    • இப்போது, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது

    பாஜகவின் 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்திற்கு 'ஜெய் சிவாஜி' மற்றும் 'ஜெய் பவானி' என்ற முழக்கம் மூலம் பதிலடி கொடுக்குமாறு தனது கட்சியினரிடம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள முலுண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னால், அவர்கள் ஜெய் சிவாஜி மற்றும் ஜெய் பவானி என்று கூறாமல் அங்கிருந்து செல்ல அனுமதிக்காதீர்கள். பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.

    பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதை பாஜக ஆரம்பத்தில் எதிர்த்து. ஆனால் இப்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசினார். 

    ×