search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழ பிரியாணி"

    • கோடைகால வெப்ப மண்டல விருந்து என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது இந்த உணவு தயாரிப்பை விமர்சனம் செய்துள்ளனர்.
    • பிரியாணி மற்றும் மாம்பழத்திற்கு நீதி வழங்குங்கள் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

    சமூக வலைதளங்களில் சமையல் குறிப்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகளவில் பகிரப்படுகிறது. சில பெண்கள் வித்தியாசமான உணவு தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில உணவு வகைகள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது.

    அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் மாம்பழ பிரியாணி தயாரிப்பது குறித்து வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கனவே பார்பி மற்றும் ஸ்பைடர் மேன் பிரியாணி வகைகளை தயாரித்து வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். அவை ஏற்கனவே சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோவிலும் ஒரு பானையில் மஞ்சள் நிற பிரியாணியுடன் அவர் நிற்கிறார்.

    பின்னர் பிரியாணியில் துண்டுகளாக்கப்பட்ட மாம்பழத்தை சேர்த்து மாம்பழ பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. கோடைகால வெப்ப மண்டல விருந்து என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது இந்த உணவு தயாரிப்பை விமர்சனம் செய்துள்ளனர்.

    பிரியாணி மற்றும் மாம்பழத்திற்கு நீதி வழங்குங்கள் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இந்த உணவு பரிசோதனை பீட்சாவுடன் அன்னாசி பழம் சாப்பிடுவதை போன்றது என பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சில பயனர்கள் ஹீனாவின் இந்த புதிய தயாரிப்பை ஆதரித்து பதிவிட்டனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    ×