search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோச்சிங் சென்டர்"

    • மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின.
    • . தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோச்சிங் சென்டர்கள் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     

    மேலும் கட்டிடத்தின் தரைதளத்தில் சட்டவிரோதமாக நூலகங்களை இயக்கி செயல்பட்டு வந்த ரவு உட்பட 13 கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மாணவர்கள் இதுநாள்வரை கோச்சிங் சென்டர்களில் சந்தித்துவந்த இன்னல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த மாநிலங்களவை மற்றும் மக்களவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின. இந்த விவாதத்தில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், இந்த பயிற்சி மையங்கள் கேஸ் சேம்பர் அறைகளுக்கு [இன அழைப்புக்காக ஹிட்லர் வதை முகாம்களில் பயன்படுத்தியதற்கு] சற்றும் குறைந்ததல்ல. தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மாணவர்களிடமிருந்து தானே. போட்டித்தேர்வு பயிற்சி என்பது [லாபம் கொழிக்கும்] வியாபாரமாகியுள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

     

    இதற்கிடையில் மாநிலங்களவை விவாதத்தில் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளின் இறப்பு குறித்து பேசும்போது, அமிதாப் பச்சன் மனைவியும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்கலங்கி வருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோச்சிங் சென்டருக்குள் நீர் புகுவது, மாணவர்கள் வெளியேறுவது, தீயணைப்பு வீரர்கள் போராடுவது உள்ளிட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
    • போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் மாணவர்களை துண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

    தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் துரதிஷ்டவசமாக 2 தானியா சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25) ஆகிய இரண்டு மாணவிகளும், நெவின் டால்வின் (28) என்ற மாணவரும் உயிரிழந்தனர். மாணவர்கள் நீரில் சிக்கியது, வெளியேறியது, தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்க்கப் போடுவது உள்ளிட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

     

    மாநகராட்சியின் கவனக்குறைவாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சக மாணவர்கள் இரவு முழுவதும் போரட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் அவர்கள் துண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பயிற்சி மையத்தின் உரிமையாளரான அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட அடித்தளங்களில் நூலகம் அமைக்கக்கூடாது என்ற விதி இருந்தும் சட்டவிரோதமாக அங்கு நூலகம் இயங்கி வந்துள்ளது. எனவே ரவு கோச்சிங் சென்டர் உட்பட அதுபோன்று டெல்லியில்  தரைதளத்தைச் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த 13 சிவில் சர்விஸ் கோச்சிங் சென்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

    • தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.

    இதனால் கொந்தளிப்பில் நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாணவர்கள் மரணங்களுக்கு ஆட்சி அமைப்பின் கூட்டு தோல்வி என்று ராகுல் காந்தி கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவத்தை "உள்கட்டமைப்பின் கூட்டுத் தோல்வி" என்று கூறிய ராகுல் காந்தி, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறினார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன், மழையின்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்தார்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் கூட்டு தோல்வியாகும்.

    பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை என ஒவ்வொரு நிலையிலும் சாமானியக் குடிமகன் தன் உயிரை இழப்பதன் மூலம் விலை கொடுத்து வருகிறார்.

    பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
    • நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு [RAU] ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.

    இதனால் கொந்தளிப்பில் நேற்று நாளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னாள் கூடி மாணவர்கள் மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாலேயே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக டெல்லியில் அதிகளவில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பலர் அங்கு தங்கி படித்து  வருகின்றனர். கடந்த ஜூலை ௨௨ ஆம் தேதி டெல்லியில் மற்றொரு கோச்சிங் சென்டரில் படித்து வந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைத் தழுவி நடத்தப்படும் நீட் தேர்வுகள் மாநிலப் பாடத்திட்டத்தைத் தழுவி பள்ளிப்படிப்பை மேற்கொள்ளும் பெரும்பான்மையான மாணவர்களை மருத்துவப்படிப்புகளில் சேர விடாமல் தடுத்து அநீதி  இழைக்கிறது என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தது.

    கோச்சிங் சென்டரிகளின் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காகவே நீட் திணிக்கப்பட்டது என்ற விமர்சனத்தை கல்வியாளர்கள் முனவிகின்றனர். நீட் தேர்வு அச்சத்திலும் தோல்வியிலும் ஏற்படும் தற்கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆராம்பம் முதலே நீட் தேர்வை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் எழுந்துள்ளது என வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

    கடந்த மாதம் 5 ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த வருட நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை மறு தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்தது.

    இதனைதொடர்ந்து தீவிரமடைந்துள்ள நீட் எதிரிப்பு போராட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கி நியாயம் கேட்கத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வை எதிரித்து சட்டப் போராட்டங்களையும் மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

     

    தமிழக அரசு நிறைவேற்றிய நீட் ரத்து மசோதா குடியரசுத் தலைவரின் மேஜையில் ஒப்புதலுக்கு காத்துக்கிடக்கிறது. இதற்கிடையில் இந்த வருடம் நடபதப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிர அரசு நீட் தேர்வு தங்களது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாவும் இந்த வருட தேர்வை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×