என் மலர்
நீங்கள் தேடியது "யுடியூபர்"
- காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.
- இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தத்க்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பாடம் எடுத்த பெண் யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். 20,50 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட இந்த சேனலில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்குவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பரத்வாஜ் தனது புகாரில், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் [NIFT] பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.
- இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றார்
புதிய ஊருக்கு சென்றாலே திக்கு திசை தெரியாமல் முழிக்கும் நிலைமைதான் அனைவர்க்கும். அதே புதிய நாட்டுக்கு சென்றால் அதுவும் அங்கு தெரிந்தவர் யாரும் இல்லாமல் இருந்தால் பெரும்பாடு தான். அந்த நிலைமைதான் யூடியூபில் டிராவல் VLOGGING செய்யும் இந்தியர் ஒருவருக்கு ஈரானில் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் புது இடங்களைப் பார்க்க வேண்டும், பயணங்கள் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பர். ஆனால் வீடு, பொறுப்பு, வேலை என பலவிதமான கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
வேலையிடம் - வீடு என இந்த இடைப்பட்ட அளவு மட்டுமே அந்த சங்கிலியின் நீளம் இருக்கும். எனவே புது இடங்களுக்கு பயணித்து அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு புது இடங்களுக்கு பயணம் செய்து வீடியோ பதிவு செய்வோர் VLOGGER என்று அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில்,On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.அங்கு என்ன ஏது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

ஈரான் விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த இந்திய யுடியூபர் விமான நிலையத்தில் வைத்து ஹுசைன் என்ற பாகிஸ்தானிய இளைஞனை சந்தித்துள்ளார். இவர் ஈரானில் பயின்று வரும் மாணவர் ஆவார். இந்தியரின் செல்போனில் நெட்வொர்க் பிரச்சனை இருந்துள்ளது. எனவே அதற்கு தீர்வுகாண ஹுசைன் முன்வந்துள்ளார். இந்தியரை டாக்சி மூலம் தனது வீட்டுக்கு ஹுசைன் அழைத்து சென்றார்.
இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றபோது, தனது வீடியோவில் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
ஆனாலும் இந்தியருக்கு நெட்வொர்க் கிடைக்கும் சிம்கார்டை வழங்க ஹுசைன் தனது வீட்டில் சிரமம் எடுத்து தேடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தியரின் நெட்வொர்க் பிரச்சனையை ஹுசைன் கடைசியாக தீர்த்து வைத்தார். அதன்பின் இந்தியர் ஈரானில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார்.
இது அனைத்தும் வீடியோ ஆக்கப்பட்டு அவர் இதை வெளியிடவே, YouTube இல் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பிற சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பாகிஸ்தானியர்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் இந்தியர்களின் எதிரிகள் என இந்திய சினிமாக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பொதுப்படையான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அது வடிகட்டிய பொய் என்பதை நிரூபிக்கத் தவறுவதில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
- திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
'மணவாளன்' (மாப்பிள்ளை) என்று அழைக்கப்படுபவர் 26 வயதான கேரள யூடியூபர் முகமது ஷாஹீன் ஷா. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள எரநெல்லூரில் வசிக்கும் இவர் கடந்த வருடம் ஏப்ரலில் கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் பதுங்கியிருந்த அவரை திருச்சூர் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவரது தலைமுடி வெட்டப்பட்டு தாடி மழிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான யூடியூபர் முகமது மன நலம் பாதிக்கப்பட்டு மன நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தண்டனை பெற்ற கைதிகளுக்கு கூட தலைமுடியை வெட்டுவதற்கு சிறிது நேரம் கொடுக்கப்பட்டது என்றும், ஆனால் யூடியூபர் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அவரது தலைமுடியை வெட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தலைமுடி மற்றும் தாடி வெட்டப்பட்ட பின்னர் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களது மகன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதனால் முடி வெட்டப்படுவதற்கு எதிராக விண்ணப்பிக்க கால அவகாசம் தருமாறு அதிகாரிகளிடம் மகன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிகாரிகள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தனது முடியை வெட்ட அவர் ஒப்புக்கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மன நல காப்பகத்தில் உள்ள அவரை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்