search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவேஷ் சந்திர தாகூர்"

    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
    • 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளார்.

    மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    சித்தாமர்ஹி என்ற தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவேஷ் சந்திர தாகூர் வெற்றி பெற்றார். இவர் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அர்ஜூன் ராய் வீழ்த்தியிருந்தார்.

    இந்த நிலையில் முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி செய்ய மாட்டேன் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேவேஷ் சந்திர தாகூர் பேசியதாக வெளியான வீடியோவில் "முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயானத்தினர் இங்கு வர விரும்பினால் அவர்களால் வர முடியும். வந்து டீ குடித்து, ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். பின்னர் சென்று விடலாம். ஆனால் எந்வொரு உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமான அம்புவில் (arrow) நரேந்திர மோடி படத்தை பார்க்கும்போது, நான் ஏன் அரிக்கேன் லைட் (ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னம்) மற்றும் லாலு யாதவின் முகத்தை உங்களிடம் பார்க்கக் கூடாது?" என்பது போல் பேசியுள்ளார்.

    மேலும் தன்னிடம் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முன்னதாக உதவி கேட்டு வந்தபோது, நடந்த விசயத்தை அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக கூறுகையில் "ஒரு வேலைக்காக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் என்னிடம் வந்தார். முதன்முறையாக என்னிடம் வந்துள்ளதால் நான் அதிகமாக பேசமாட்டேன் என்று அவரிடம் தெளிவாக கூறினேன். மற்றபடி நான் எளிதில் விடமாட்டேன்.

    நான் அவரிடம் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வாக்கு அளித்தீர்களா? என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். அவரிடம் டீ அருந்திவிட்டு கிளம்பும்படி சொல்லிவிட்டேன். உங்களுடைய வேலையை நான் செய்யமாட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்ததாக கூறினார்.

    ×