search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார் போராட்டம்"

    • துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் சென்றது. ரங்கபானி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்த இந்த ரெயில் மீது சரக்கு ரெயில் பின்பக்கமாக மோதியதில் 9 பேர் பலியாகினர்.

    இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்லில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பா.ஜ.க. அரசை கண்டித்தும், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கவுன்சிலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காங்கிரசாரின் முற்றுகை போராட்டத்தை அடுத்து ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×