என் மலர்
நீங்கள் தேடியது "பந்துவீச்சாளர்"
- பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
- 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.
புதுடெல்லி:
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.
இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.
டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடம் பிடித்தார்.
- அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
துபாய்:
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி அசத்தியது.
இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 5 விக்கெட், 2-வது போட்டியில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட் சாய்த்தார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அவரை தொடர்ந்து அஸ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் 3வது இடத்திலும், கம்மின்ஸ் 4வது இடத்திலும் உள்ளார். ரபடா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.