search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்காக்ஸ்"

    • ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
    • டோக்கியோ ஒலிம்பிக்கில் வோண்ட்ரசோவா வெள்ளி வென்றார்.

    பாரிஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து செக் நாட்டு வீராங்கனையான மார்கெட்டா வோண்ட்ரசோவா மற்றும் போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் கவனம் செலுத்துவதற்காக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன் என வோண்ட்ரசோவா தெரிவித்துள்ளார்.

    இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலந்து வீரர் ஹர்காக்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    • ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.
    • இன்று நடந்த இறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பெர்லின்:

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலந்து வீரர் ஹர்காக்சை சந்தித்தார்.

    இதில் சின்னர் 7-6 (10-8), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் போலந்து வீரர் ஹர்காக்ஸ் வென்றார்.

    பெர்லின்:

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் ஹர்காக்ஸ் 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் வென்றார்.

    பெர்லின்:

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ், அமெரிக்க வீரர் மார்கஸ் கிரானுடன் மோதினார்.

    இதில் ஹர்காக்ஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஆர்தர் பில்சை 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஹர்காக்ஸ், ஸ்வரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.

    ×