என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்க்கட்சியினர்"
- சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது.
- எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என்றும் எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை" என்று சபாநாயகர் பேசுகிறார்.
ஏற்கனவே சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோவை முழுமையாக ஒளிபரப்புவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இப்போது சபாநாயகர் அவர்களே இப்படி பேசுவது ஜனநாயகமா என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் சுமந்த சி ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம்.
- மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.
மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கின.
இதற்கிடையே மேல்-சபையின் அவைத் தலைவர் ஜெகதீப்தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்தன.
இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு மேல்-சபை கூடியதும், ஆளும் கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள், அவைத் தலைவர் தங்கரை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்ததாக குற்றம் சாட்டினர்.
விவசாயியின் மகனை எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாகக் கூறினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. எம்.பி ராதா மோகன் தாஸ் பேசினார். பா.ஜ.க. எம்.பியின் பேச்சுக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
அப்போது ஜெகதீப்தன்கர் கூறும்போது, நான் ஒரு விவசாயியின் மகன். நான் பலவீனத்தை காட்டமாட்டேன். என் நாட்டிற்காக என் உயிரை தியாகம் செய்வேன். நான் நிறைய சகித்துக் கொண்டேன். தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பேசுவதற்கு பா.ஜ.க. உறுப்பினர்களை ஊக்குவிக்கிறீர்கள். நானும் விவசாயியின் மகன்தான். உங்களை விட அதிக சவால்களை நான் எதிர்கொண்டு உள்ளேன்.
எங்கள் கட்சி தலைவர்களை அவமதிக்கிறீர்கள், காங்கிரசை இழிவு படுத்துகிறீர்கள். உங்கள் புகழைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. விவாதத்திற்கு வந்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் நோட்டீஸ் வர முதலீட்டாளர் ஜார்ஜு டன் காங்கிரஸ் தலைமையின் தொடர்பு பற்றிய பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு தரப்பு உறுப்பினர்கள் இடையே கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதையடுத்து மேல்-சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.