என் மலர்
நீங்கள் தேடியது "அரசுப் பணிகள்"
- ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.
அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதுதித்து தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி பல மாணவர்கள் பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
அப்போது பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் சந்திரசேகர் சிங் ஒரு மாணவரை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை போலீஸ் அந்த இடத்திலிருந்து விரட்டியடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.