என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.டி. வாசுதேவன் நாயர்"

    • நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.
    • உத்தரப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியங்களின் நகரம் என்ற UNESCO அந்தஸ்த்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடமே இதற்க்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு மலபார் பகுதியில் உள்ள கோழிக்கோடு நகரம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் வருவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகோயோருக்கு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்து கோழிக்கோடு இந்தியாவுக்குகான நுழைவாயிலாக திகழ்கிறது.

     

     

    இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த காலம் தொட்டு கோழிக்கோடு மலையாள இலக்கியகர்த்தாக்கள் புழங்கும் நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு புத்தக திருவிழாக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டேகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.

     

     

    சுமார் 500 நூலகங்களைக் கோழிக்கோடு தன்னகத்தே கொண்டுள்ளது. எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினார். பல தசாப்தங்களாக கோழிகோட்டில் நடந்து வரும் புத்தக திருவிழாக்கள் அந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில்தான் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

     

    இதைத்தொடர்ந்து கோழிக்கோட்டில் ஜூன் 23 இலக்கிய நகரத்தின் நாள் வருடந்தோறும் கொண்டாடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர்த்து நாட்டுப்புற கலைகள், அலங்காரம், சினிமா, ஊடக கலை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடமே இந்த 350 நகரங்களின் பட்டியல் வெளியான நிலையில் தற்போது அந்நகரங்களின் பிரதிநிதிகள் வரும் ஜூலை 1-5 வரை  யுனெஸ்கோ சார்பில் போர்ச்சுகளில்  நடக்க உள்ள கருதத்தரங்களில் கலந்து கொள்ள உள்ளனர். UNESCO என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆகும். 

    • மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்.
    • அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் ((91), இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று இரவு காலமானார். மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர்.

    இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

    எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது.
    • தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.

    பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.

    மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

    மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான 'கன்யாகுமரி' படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான 'மனோரதங்கள்' வரை அந்த நட்பு தொடர்ந்தது.

    மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.

    எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.

    மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி என்று கூறியுள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் 7 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
    • இதில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர் ஆவார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    அதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இரப்பை குடலியல் நிபுணர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி, முதல் சீக்கிய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், கதக் நடனக்கலைஞர் குமுதினி லகியா, வயலின் இசைக்கலைஞர் லட்சுமிநாராயண சுப்ரமணியம், மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மறைந்த தொழிலதிபர் ஒசாமு சுசுகி, மறைந்த பாடகி ஷ்ரத்தா சின்ஹா உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் வாசுதேவன் நாயர், ஒசாமு சுசுகி, ஷ்ரத்தா சின்ஹா ஆகியோருக்கு மறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    ×