search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்"

    • பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்.
    • ரூ1.57 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள்.


    பத்மநாபசுவாமி கோவிலுக்கு கட்டிடங்கள், சிறப்பு பூஜைகள், யானை ஊர்வலத்துக்கான வாடகை, படங்கள்-உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை என பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. அவற்றில் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.

    ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ1.57கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த நிலுவை தொகையை கோவில் நிர்வாகம் செலுத்தாமல் இருந்திருக்கிறது.

    ஆகவே நிலுவையாக உள்ள ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்துமாறு பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் விலக்கு உள்ள பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவில் அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர்.

    • கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
    • இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது.

    நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான கோவில்களைக் கொண்ட இந்தியா, 'கோயில்களின் பூமி' என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் முதல், அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் வரை என பட்டியலில் கோவில்களை சேர்த்துக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் எளிமையான, அல்லது சில உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலைகளை உள்ளடக்கியது. இதில் இன்று நாம் பணக்கார கோவில்களான முதலிடத்தில் இருக்கும் நாட்டிலுள்ள சில பணக்காரக் கோயில்களைப் பற்றி பார்க்கலாம்.

    ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

    கேரளா இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவில். இந்தியா மட்டுமல்ல உலகின் பணக்கார இந்து கோவிலும் இது தான். இந்த கோவிலை அடிப்படையாக வைத்து தான் திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்ற பெயரே உருவானது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. 2011 ல் திறக்கப்பட்ட ரகசிய அறை ஏ வில் இருந்த தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு தான் இது. இதுவரை பி அறை திறக்கப்படவில்லை.

    திருப்பதி

    ஆந்திராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏறக்குறைய 80,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

    ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா

    உலகில் வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஷீரடி சாய்பாபா கோவில். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு

    அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகும், அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது காஷ்மீர் மாதா வைஷ்ண தேவி கோவில். இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


    மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவில்

    இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாகும். தங்கம், தங்கம் சிலை, வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களும் இதில் அடங்கும்.


    புரி ஜெகந்நாதர் கோயில்

    இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் சராசரியாக 30,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்த செல்கிறார்கள். இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோவிலின் கருவூலங்களில் உள்ள ஏழு அறைகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இவற்றில் தான் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் சேமித்து வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


    குருவாயூர் கிருஷ்ணன்

    காக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்து கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று.


    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில்

    தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை என ஆண்டுக்கு சுமார் 33 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.


    காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி

    இந்தியாவில் புண்ணிய தலங்களில் தலைமை தலமாக உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இரண்டு தங்கத்தால் ஆன கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.


    பஞ்சாபின் பொற்கோயில்

    பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இந்த கோயில் இந்தியாவின் பணக்கார கோவிலாகும்.

    ×