என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து ஊழியர்கள்"

    • ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.

    வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர்.
    • கோவை மாவட்ட சிஐடியு அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட சிஐடியு அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×