என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா மாநிலம்"
- வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், அவர் தனது மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக, நேற்று முதல் தொடங்கி 11 நாட்கள் நீடிக்கும் வாராஹி தீக்ஷை விரதம் மேற்கொள்கிறார்.
இதில் வாராஹி அம்மனை வழிபடும் பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார். அதனுடன், அவர் வாராஹி விஜய யாத்திரையைத் தொடங்கி தீட்சை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
- அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார்.
ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
அந்த சேவலுக்கு ஜிமிக்கி போட்டு சிங்காரித்திருந்தார். இறக்கைகளை வண்ணம் தீட்டி அலங்கரித்து பூ சூட்டி கொண்டு வந்திருந்தார். அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார். இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி வேண்டுதலை நிறைவேற்றினேன் என அவர் தெரிவித்தார்.
- உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம், மண்டப்பேட்டையை சேர்ந்தவர் கீதா ரத்தினம். இவர் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை பையில் எடுத்துக்கொண்டு ஐதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார்.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து நர்கெட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிப்பதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தனார் . கீதா ரத்தினம் தான் கொண்டு வந்த நகை பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினார்.
திரும்பி வந்தபோது அவர் இருக்கையில் வைத்து விட்டு சென்ற நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ரத்தினம் உடனடியாக பஸ் டிரைவரிடம் தகவல் தெரிவித்தார்.
பஸ் டிரைவர் பஸ்சை நேராக அப்துல்லாபூர் மெட் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். போலீசார் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
இருப்பினும் நகை பையை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
- கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், தர்மாவரத்தை சேர்ந்தவர் ஷேக் காஜா பீரா. ஓவியரான இவருக்கும் 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்.
ஓவியம் வரைவதில் போதிய வருமானம் கிடைக்காததால் மனைவிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் வறுமையில் வாடினார்.
ஓவியம் வரையும் தொழிலை விட்டுவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு அனந்த பூரில் திருட்டு தொழிலை தொடங்கினார்.
இரவு நேரங்களில் நோட்டமிட்ட வீடுகளில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்தார். திருட்டு தொழிலில் ஷேக் காஜா பீராவுக்கு அதிக அளவில் பணம் கிடைத்தது. திருட்டுத் தொழிலில் கிடைத்தால் பணத்தின் மூலம் கார் ஒன்றை வாங்கினார்.
காரை எடுத்துச் சென்று அனந்தபூர் மாவட்டத்தில் 14 வீடுகளிலும், கர்நாடக மாநிலம், பாகே பள்ளிக்கு சென்ற ஷேக் காஜா பீரா 4 வீடுகளிலும், கோலாறில் 5 வீடுகளிலும் கொள்ளை அடித்தார். மொத்தம் 27 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் ஷேக் காஜா பீராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் தர்மாவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மகேஷ், ஜமீர் ஆகியோரை தன்னுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளை ஈடுபட்டார். பகல் நேரங்களில் மகேஷ், ஜபீர் ஆகியோர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வருவார்கள். இரவு நேரத்தில் ஜபீர் காரில் சென்று குறிப்பிட்ட வீட்டின் அருகில் நிறுத்துவார்.
மகேஷும் ஜபீரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். ஷேக் காஜா பீரா மட்டும் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்து வந்தனர்.
போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அனந்தபூர் சி.சி.எஸ் சாலையில் காரில் சென்ற ஷேக் காஜா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
விசாரணை நடத்தியதில் மொத்தம் ஆந்திரா தெலுங்கானாவில் 41 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 310 கிராம் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.