என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி வீரர்கள்"

    • வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது.
    • வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் வெளிநாட்டு தொடர்களின் போது, வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். 'போட்டி முடிந்த பிறகு அறைக்கு சென்று தனியாக சோகத்தில் இருக்க விரும்பவில்லை. களத்தில் சரியாக செயல்படாத சூழலில், குடும்ப உறுப்பினர்கள் உடன் இருக்கும் போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும். குடும்பத்தினருடன் இருக்கும் முக்கியத்துவத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை' என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோலியின் ஆட்சேபனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா பதில் அளிக்கையில் 'வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. இது இந்திய அணிக்கும், நமது கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகவும் முக்கியமானது. வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு சில மனக்கசப்புகள் அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் இந்த விதிமுறை அணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த விதிமுறை ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது அல்ல. இத்தகைய நடைமுறை பல ஆண்டுகளாகவே உள்ளது. அவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    இதற்கிடையே, ஐ.பி.எல். 10 அணிகளின் கேப்டன்களுடன் கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பந்தை பளபளப்பாக்க அதன் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து கேப்டன்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்பட உள்ளது.

    • மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக செல்கின்றனர்.
    • பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் அலை கடல் என திரண்டுள்ளனர்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
    • காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    • சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைய உள்ளனர்.

    இந்நிலையில் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    இதனையடுத்து திறந்தவெளி பஸ்சில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி உள்ளனர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்ட நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் (ரசிகர்கள்) நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். வெற்றியை மும்பையில் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது.
    • சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் நேற்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு இந்திய அணியினர் மும்பைக்கு புறப்பட்டனர்.

    மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடையணும். ஆனால் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கிடந்தனர்.

    இதனையடுத்து திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தில் பயணம் செய்தனர்.

    இந்திய அணி வீரர்களை காண லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. அப்போது சிலர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் நரிமன் பாயிண்டில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.

    ×