search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்பாடி"

    • பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும்.
    • காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

    பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை.

    ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

    அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இந்தப் பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதால் வரும் 100 ஆண்டுகளுக்கு என் பெயரைச் சொல்லும்.

    நான் என்னுடைய தொகுதியை கோவிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.

    என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதி பெயர் காட்பாடி , காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் போகும். என்னை வளர்த்தவர்கள் நீங்கள் தான்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக கூறினார்.

    • ஏடிஎம் மையத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.

    அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக எல்லையோரம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். காட்பாடி வழியாக கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர், வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ×