என் மலர்
நீங்கள் தேடியது "தங்கச் சுரங்கம்"
- தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
- 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


- கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
"சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் உரிமம் பெற்றது.
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது.
பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2005 ஆம் ஆண்டில், அரசாங்கம் மீண்டும் திறந்த உரிமக் கொள்கை மூலம் தனியார் நிறுவனங்களைத் தேடியது.
அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது. ஆனால் இந்த ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது.
இதற்கிடையில், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) ஜியோமைசூரில் 40% பங்குகளை வாங்கியது. மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி 2021 இல் சோதனைகளைத் தொடங்கியது. மேலும் ஒரு சிறிய செயலாக்க யுனிட்டை நிறுவி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.

இதுகுறித்து பேசிய ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத், இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆந்திர பிரதேச அரசு சுற்றுசூழல் அனுமதியை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்று மாதங்களுக்குள் தங்க உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.