என் மலர்
நீங்கள் தேடியது "Car கார்"
- மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார் மீது பேருந்து ஒன்று மோதியது.
- இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 0007 என்ற பதிவு எண் ஜனவரி மாதத்தில் ரூ.10.8 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது.
- அரசியல்வாதிகள் மத்தியிலும் 0001 என்ற எண் அதிகம் தேடப்பட்டதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கார் வாங்குவது பலரது கனவாக இருந்தாலும், அதிலும் சிலர் ஆடம்பர சொகுசு கார்களை வாங்குவார்கள். சிலர் காரின் நம்பர் பேன்சியாக இருக்க ஆசைப்படுவார்கள். அப்படிதான் மார்ச் மாதத்தில் 0001 என்ற வாகன பதிவு எண் ரூ.23.4 லட்சத்திற்கு ஏலம் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி அரசின் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் 0001 என்ற வாகன பதிவு எண் இந்த ஆண்டு ஜூன் வரையிலான அதிகபட்ச ஏலமாக கருதப்படுகிறது. 0009 என்ற பதிவு எண் ஜூன் மாதத்தில் ரூ.11 லட்சத்துக்கும், 0007 என்ற பதிவு எண் ஜனவரி மாதத்தில் ரூ.10.8 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது.
ரூ.23.4 லட்சத்திற்கு 0001 என்ற வாகன பதிவு எண்ணை ஏலம் எடுத்த நபரின் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த தொகையை கொண்டு 4 பேர் செல்லக்கூடிய 2 ஹேச்பேக் கார்கள் அல்லது சௌகரிய வசதிகள் அடங்கிய எஸ்யுவி காரை வாங்கியிருக்கலாம்.
ரூ.23.4 லட்சம் ஏலம் போன பதிவு எண்ணின் அடிப்படை விலை ரூ.5 லட்சம். அரசியல்வாதிகள் மத்தியிலும் 0001 என்ற எண் அதிகம் தேடப்பட்டதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.