என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்ஸ்டராங்"
- ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
- ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
தமிழர்கள் சாதிகளாக பிரிந்து, பிளந்து கிடப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் மீட்சிக்கும், எழுச்சிக்கும் மிகப்பெரிய இடையூறு என்பதை சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் நன்கு உணர்ந்து 'இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இப்படி சாதி, மதங்களாக பிரிந்து நிற்கப்போகிறோம்?' என்ற கேள்வியை மக்களிடத்தில் தொடர்ச்சியாக எழுப்பியவர். 'தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது' என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர்.
அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
ஆகவே, மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி நினைவைப் போற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
- வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற பாம் சரவணனை போலீசார் இடது காலில் சுட்டு பிடித்தனர்.
- ஆந்திர மாநில போலீசார் மற்றும் ஆந்திர வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போரூர்:
சென்னை புளியந்தோப்பு, பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன். ரவுடியான இவர் மீது 6 கொலை, கொலை முயற்சி வெடி குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது சகோதரரும் அரசியல் கட்சி ஒன்றின் மாவட்ட செயலாளருமான தென்னரசு என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு வெங்கல் பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தனது அண்ணனை கொலை செய்த கும்பலை பழி தீர்க்க திட்டம் தீட்டி வந்த பாம் சரவணன் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை கடந்த 15-ந் தேதி புளியந்தோப்பு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர் அப்போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற பாம் சரவணனை போலீசார் இடது காலில் சுட்டு பிடித்தனர்.
இதில் காயமடைந்த அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது அண்ணன் தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய கோயம்பேட்டை சேர்ந்த ரவுடியான செல்வம் என்கிற பன்னீர்செல்வத்தை கடந்த 2018-ம் ஆண்டு பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்று ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆற்றங்கரை யோரம் வைத்து கொன்று எரித்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாம் சரவணனை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ஆந்திர மாநிலம் கூடூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மற்றும் ஆந்திர வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.