என் மலர்
நீங்கள் தேடியது "டோனா வெகிக்"
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் காலிறுதியில் குரோசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் குரோசிய வீராங்கனையான டோனா வெகிக், நியூசிலாந்து வீராங்கனை லுலு சுன்னுடன் மோதினார்.
இதில் வெகிக் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதையடுத்து சுதாரித்த அவர் 6-4, 6-1 என கைப்பற்றினார். இதையடுத்து, வெகிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் குரோசியா வீராங்கனை டோனா வெகிக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் குரோசிய வீராங்கனை டோனா வெகிக், அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆஷ்லின் 5-7, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குரோசிய வீராங்கனை வெகிக் தொடரில் இருந்து வெளியேறினார்.