என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வீராங்கனை"

    • 28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது.
    • பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தார்.

    கொச்சி:

    28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    அத்துடன் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கையும் (57.80 வினாடி) எட்டினார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த போட்டியில் குஜராத்தின் சரிதாபென் கெய்க்வாட் 57.21 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    கேரளாவின் அனு (58.26 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 02.41 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். முந்தைய நாளில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யா வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
    • இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 14 வகையான பந்தயங்கள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழக வீராங்கனைகள் டாப்-3 இடங்களை வசப்படுத்தினர். நித்யா ராமராஜ் 13.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கே.நந்தினி (13.58 வினாடி) 2-வது இடத்தையும், ஸ்ரீரேஷ்மா (13.99 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 56.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை சொந்தமாக்கினார். கேரள வீராங்கனை அனு (57.52 வினாடி) 2-வது இடத்தையும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 01.27 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கிருத்திகா 11.87 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கேரளாவின் ஆர்த்ரா (12.07 வினாடி) 2-வது இடமும், பீகாரின் ஷதாக்ஷி ராய் (12.15 வினாடி) 3-வது இடமும் கைப்பற்றினர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஆந்திர வீரர் ஷேக் முகைதீன் (2.08 மீட்டர்) முதலிடமும், தமிழக வீரர் முகேஷ் அசோக்குமார் (2.05 மீட்டர்) 2-வது இடமும், கடற்படை வீரர் பாரதி விஸ்வநாதன் (2.05 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் உத்தரபிரதேசத்தின் ஆதித்யா குமார் சிங் (7.74 மீட்டர்) தங்கப்பதக்கத்தை வென்றார். ரெயில்வே வீரர் சுவாமி நாதன் (7.64 மீட்டர்) 2-வது இடமும், தமிழகத்தின் ஷரோன் ஜெஸ்டஸ் (7.54 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர். டிரிபிள் ஜம்பில் தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் 15.64 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    • தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
    • கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.

    பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,

    இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.

    தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
    • வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப்போட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    பெண்களுக்கான பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 58 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த சர்வதேச போட்டி இந்தியாவில் வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச சேட்லைட் பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் பெயர் விவரம்:-

    விபுஷா, ஜாய்ஸ் அஷிதா, சுவர்ணபிரபா, திவ்ய தர்ஷினி (4 பேரும் சென்னை) ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி (சேலம்).

    இந்திய அணிக்கு 6 தமிழக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
    • உலக கேரம் போட்டியில் தமிழக வீராங்கனை 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

    இந்நிலையில் காசிமாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், " அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார்.
    • மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வீராங்கனை காசிமாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம்- பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார்.

    தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடைபெற்றது.
    • ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் கஸ்தூரி பங்கேற்றார்.

    சென்னை:

    உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள நோவோசிர்ஸக் நகரில் கடந்த 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்கின்றனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெஞ்ச் மற்றும் டெட்லிப்ட் முறையில் மொத்தம் 105 கிலோ தூக்கி முதல் இடத்தை பிடித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அவர் ரஷியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பினார். தங்கம் வென்ற கஸ்தூரிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுச்செயலாளர்கள் எஸ்.பகவதி மூத்த துணைத்தலைவர், எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறவினர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சொந்த ஊரில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.

    முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தற்போது அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
    • இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.

    இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச் சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19-ந்தேதி வரை நடைபெற்றன.

    இப்போட்டிகளில் தமிழ் நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக "சிறந்த அட்டாக்கர் விருதை" வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் தமிழக வீரர் வி.சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கமாலினியின் இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×