search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெயில்-ஸ்பாட் ஷீல்டு டெயில்"

    • மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும்.
    • பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும். கேரளாவில் தொடங்கி மஹாராஷ்டிரா வரை நீண்டுள்ள இந்த மலைப்பகுதி அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் மழை வளத்துக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

    இங்கு பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷோலோ காடுகளின் மீதான ஆர்வலர்கள் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 'டெயில்-ஸ்பாட் ஷீல்டு டெயில்' எனப்படும் அரிய வகை பாம்பை கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் தெரிவிக்கையில், பாம்புகள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை பூமிக்கடியில் கழிப்பதகவும், மழைக்காலத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியில் வருவதாகவும் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் மலைப்பகுதியிலும், மேகமலை-மூணாறு மலைப்பகுதியிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட பாம்புகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் மீது 3 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் டி.என்.ஏ. தரவுகளுடன் பல அருங்காட்சியக மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்ததில் இங்கு இருப்பது அரிய வகை பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைக்கப்பட்ட பன்முகத் தன்மையை இந்த பாம்பு வகை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் ஊர்வன விலங்குகள் மாறுபட்ட தன்மை கொண்டதாகும். 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளூர் இனங்களும், அகாசியா, லந்தானா, வாட்டில் போன்ற அன்னிய ஊர்வன விலங்குகளும், மலை சார்ந்த பகுதிகளில் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

    பாம்புகளில் விஷத்தன்மை கொண்டது, விஷத்தன்மை இல்லாதது என இருந்தபோதும், இவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டும் 15 வகை புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.

    ×