என் மலர்
நீங்கள் தேடியது "பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்"
- பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார்.
- இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு கடுமையான குறைபாடுகள் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனக்கு விற்றதாக பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பழைய காருக்கு பதில் புதிய காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.