என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்ற நீதிபதி"

    • சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
    • 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

    நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

    சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.

    தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.

    மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.

    அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.

    எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விபரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

    • நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
    • அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

    இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.

    சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

    சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.

    சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
    • இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.

    உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.

    • கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி கோடீஸ்வரர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாகினர்.

    காலியாக இருந்த 2 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

     

    பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

    ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமரவைக்கப்பட்டிருக்கிறார்.
    • இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் மாதவிடாய் காலத்தின்போது வீட்டிற்கு வெளியே தங்க வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடூரமான கதையை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பகிர்ந்து கொண்டார்.

    ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி பேச தொடங்கிய சஞ்சய் கரோல், "இந்த புகைப்படம் நான் 2023 ஆம் ஆண்டு ஒரு தொலைதூர கிராமத்தில் எடுத்தேன். மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமரவைக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அவர்களின் மொழியைப் பேசினீர்களா? நீங்கள் அவர்களை அணுகினீர்களா? நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டீர்களா?

    இந்தியா என்பது டெல்லி மற்றும் மும்பை மட்டுமில்லை. நாம் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கக்கூடியர்கள் குறிப்பாக நீதி கிடைக்காத ஒருவரை அல்லது நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை சந்திக்க வேண்டும். அவர்களுடைய மொழியில் பேசி நாட்டின் சட்டத்தை புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமசுப்பிரமணியம் தமிழகத்தை சேர்ந்தவர்.
    • பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்தனர்.

    ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமசுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.

    முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்தனர்.

    சென்னை உயர்நீதிமன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் ராமசுப்பிரமணியம் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

    இதற்கு முன்பு, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக விஜய பாரதி சயானி பதவியில் இருந்தார்.

     

    ×