search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகிலேஷ்"

    • திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
    • 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ×