என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கௌரி லங்கேஷ்"

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்தார் நவீன் குமார்.

    கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்  வழங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையில் இந்தப் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழக்கின் தீர்ப்பு தாமதமாவதால் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மற்ற 3 குற்றவாளிகளும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவனான நவீன்குமார், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    • இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு இந்து அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொலை வழக்கில் சிக்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தனர். இருவருக்கும் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    ஜாமின் கிடைத்த நிலையில், இருவரும் கடந்த 11 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து சொந்த ஊரான விஜயபுராவுக்கு சென்ற பரசுராம் மற்றும் மனோகர் ஆகிய இருவருக்கும் உள்ளூர் வாசிகளான இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

    சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்த இருவரை இந்து அமைப்பினர் சத்ரபதி சிவாஜி சிலை அருகே அழைத்து சென்று இருவருக்கும் மாலை அணிவித்தனர். அதன்பிறகு அருகில் அருந்த கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள இருவருக்கு உள்ளூரில் இந்து அமைப்பினர் வரவேற்பு கொடுத்த சம்பவம் முகம் சுளிக்க செய்தது.

    • ஜாமீனில் வெளிவந்த கொலை குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமீனில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.

    மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

     

    மேலும் வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிடுவேன் என்றும் ஸ்ரீகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆளும் மகாயுதி கூட்டணி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] இடையே சீட் பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமினில் வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமினில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதைய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டதை மகாராஷ்டிர முதல்வர் ஏகாந்த் ஷிண்டே ரத்து செய்தார்.

    ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா கட்சி சார்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று காந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    ×