என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமாந்த பிஸ்வா சர்மா"

    • 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்
    • இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவதாக தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விசா ரத்து உள்ளிட்டவற்றுடன் இந்திய அரசு எடுத்த மற்றொரு முக்கிய முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். இதனால் பாகிஸ்தானின் நீராதாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

    இந்நிலையில் "1960 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், அப்போதைய அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் கடுமையான அழுத்தத்தின் கீழ், நேரு, சிந்து நதிப் படுகையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்.

    வலிமைமிக்க சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு வழங்கினார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 135 மில்லியன் MAF தண்ணீர் கிடைக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிடம் 33 MAF மட்டுமே மீதமுள்ளது.

    மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் உரிமைகள் சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றின் வழியாக ஓடும் நீர் மின் திட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை எந்த அர்த்தமுள்ள சேமிப்பும் இல்லாமல் உள்ளன, இதனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர் தேவைகள் நிரந்தரமாகச் சமரசம் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்பட்டதற்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. அங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயம் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது.

    மோடியின் நடவடிக்கைகள், மன்னிப்பு கேட்டு நிற்காமல் தனது நலன்களைப் பாதுகாக்கத் தீர்மானித்த ஒரு புதிய, உறுதியான இந்தியாவின் எழுச்சியைக் குறிக்கின்றன" என்றும் அவர் மேலும் கூறினார். 

    • சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
    • அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக ஏஐயுடிஎஃப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமை அசாம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து , வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இந்நிலையில் இதை விமர்சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக அசாம் எதிர்கட்சியான ஏஐயுடிஎஃப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமை அசாம் கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா, "நாங்கள் அவர் பேசும் வீடியோவை பார்த்தோம். தாக்குதலில் பாகிஸ்தான் உடந்தையை மறைத்து பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் ஏஐயுடிஎஃப் கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், "எம்எல்ஏவின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று தெரிவித்தார். 

    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது.
    • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனக் கூறிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    "புள்ளி விவரங்கள் மாதிரியின்படி அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதன்படி 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம், யாராலும் இதை தடுத்து நிறுத்த முடியாது.

    ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது. முஸ்லிம் மக்களை தொகையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசின் பணி முக்கியமானது.

    மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதராக ராகுல் காந்தி ஆனால், அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்" என்றார்.

    • உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை
    • கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

    அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

    இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?

    மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.

    2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?

    அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.

    ×