என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரவண குமார்"

    • நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

    இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் தொடங்கியது.

    நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 27 ரன்னிலும் ராஜ்குமார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ஷியாம் சுந்தர் 31 ரன்னிலும் ஜபார் ஜமால் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவி ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி திருச்சி அணியை வெற்றி பெற வைத்தார்.

    சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×