என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெட் அலெர்ட்"
- காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மீன்வளத் துறையினரின் உத்தரவின் பெயரில் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைத் திரும்பி வருகின்றனர்.
காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும். மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ராணிப்பேட்டை, வேலூர், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு விடுத்துள்ளது.
அதன்படி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- 24 மணி நேரத்தில் மட்டும் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மும்பையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை வலியுறுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைவாசிகள் வீடுகளிலேயே இருக்க கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் அவசர உதவிகளுக்கு 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என மும்பை காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அருகாமை விமான நிலையங்களில் இருந்து மும்பை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 90 மில்லிமீட்டர்களும் பதிவாகி உள்ளது.
இதுதவிர கனமழை காரணமாக பூனேவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் தானேவில் உள்ள பார்வி அணையில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்