search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோக்கியோ ஒலிம்பிக்"

    • ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
    • காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

    இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட அதே அணிகள்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதி போட்டியில் மோதுவுள்ளன.

    காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தையும், ஜெர்மனி அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் ஸ்பெயினையும், நெதர்லாந்து ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.

    2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

    ×