search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்ரிமோனி"

    • டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
    • இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×